×

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5.28 லட்சம் நூதன மோசடி: பலே ஆசாமி கைது

சென்னை: கொளத்தூர் பெரிய தேவி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன் (32). இவர், சென்னை மண்ணடி அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளரை சந்தித்து, ‘‘சென்னையில் ஒரு வங்கியில் தனது ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை அடமானம் வைத்துள்ளேன். உங்கள் வங்கியில் எனக்கு நகைக்கடன் கொடுத்தால் அந்த நகையை மீட்டு, இங்கு அடமானம் வைக்கிறேன்,’’ என கூறியுள்ளார். அதற்கான ஆவணங்களை காட்டி உள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் இவருக்கு ரூ.5 லட்சத்து 28 ஆயிரம் நகைகடன் வழங்கி, பிரசன்ன வெங்கடேசன் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொண்ட பிரசன்ன வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. சந்தேகமடைந்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் அவர் கொடுத்த வங்கியின் முகவரியில் விசாரித்தபோது, போலி என தெரிய வந்தது. புகாரின்பேரில் துறைமுகம் உதவி ஆணையர் வீரக்குமார் மேற்பார்வையில் குற்றபிரிவு  இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில், போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த பிரசன்ன வெங்கடேசனை நேற்று கைது செய்தனர்….

The post போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.5.28 லட்சம் நூதன மோசடி: பலே ஆசாமி கைது appeared first on Dinakaran.

Tags : Bale Asami ,CHENNAI ,Prasanna Venkatesan ,Periya Devi Amman Koil Street, Kolathur ,Mannadi Angappanayakkan ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...